VIDEO: சென்னையில் உச்சகட்ட ‘போதையில்’ இளம் பெண்கள் அடாவடி- பொதுமக்கள் ’ஷாக்’!

Published On:

| By Mathi

Chennai: Young Women Create Racket Under Extreme Intoxication

சென்னையை அடுத்த புழல் பகுதியில் இரு இளம் பெண்கள் உச்சகட்ட போதையில் அடாவடியில் ஈடுபட்டது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

புழல் காவாங்கரை பகுதியில் 2 இளம்பெண்கள் போதையில் ஸ்கூட்டியை ஓட்டி வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து போதையில் வந்த இளைஞரின் இரு சக்கர வாகனம், பிற வாகனங்கள் மீது மோதியது. இதனால் அந்த இளைஞர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் இளம் பெண்கள் இருவரையும் பொதுமக்களும் போலீசாரும் சுற்றி வளைத்தனர். ஆனால் உச்சகட்ட போதையில் இருந்த 2 பெண்களும் பேருந்துகளையும் வாகனங்களையும் மறித்து ஆபாசமாக பேசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதில் பொறுமையிழந்த பொதுமக்களில் சிலர், அந்த பெண்களை அடிக்கவும் தொடங்கினர். இதனையடுத்து போதையில் இருந்த இரு பெண்களையும் போலீசார் புழல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share