டீ, காபி குடிக்க முடியுமா? சர்க்கரை விலை ஒரே மாதத்தில் ரூ.25 விலை உயர்வு!

Published On:

| By Mathi

Sugar Price Hike: Rs. 25 Increase in Just One Month

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை (Sugar Price Hike) ஒரே மாதத்தில் ரூ.25 உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாடு முழுவதும் சர்க்கரை விலை அண்மையில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 1 கிலோ சர்க்கரை ரூ.45-க்கு விற்பனையாகி வந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 1 கிலோ சர்க்கரை ரூ.60 ஆக உயர்ந்தது.

ADVERTISEMENT

தற்போது தமிழ்நாட்டில் 1 கிலோ சர்க்கரை ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை இந்த மாதம் ரூ.27 உயர்ந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததால்தான் சர்க்கரை தயாரிப்பு பாதிக்கப்பட்டு கடுமையாக விலை உயர்ந்துவிட்டது என குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் மத்திய அரசு, ”இது உலகளாவிய” பிரச்சனை என்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலைமை தொடரும் நிலையில் தற்போது தேநீர் கடைகளில் டீ ரூ.15; காபி ரூ.20 என விற்பனை செய்யப்படும் நிலைமை மாறி டீ.ரூ20; காபி ரூ.25 என விலை உயர வாய்ப்பு உள்ளது. இது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share