விஜய், ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறு வீடியோ.. சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு!

Published On:

| By Mathi

sattai Durai Murugan- High Court

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறான வீடியோ வெளியிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன், கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் முதல்வர் விஜய் மற்றும் பொதுப்பணி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தவெகவின் கிறிஸ்டோபர், அக்டோபர் 3-ந் தேதி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (அக்டோபர் 29) நீதிபதி என். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share