உலக வர்த்தக அமைப்பு, ஏற்றுமதி – இறக்குமதியில் 2015ம் ஆண்டில் முதலில் உள்ள 30 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, 19வது இடத்தில் உள்ளது. ஏற்றுமதி மதிப்பு 26,700 கோடியாகவும், இறக்குமதி மதிப்பு 39,200 கோடியாகவும் உள்ளது. இது, 2014ம் ஆண்டில் ஏற்றுமதி 31,700 கோடி, இறக்குமதி 49,000 கோடி என்ற அளவில் இருந்தது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை 2.27 லட்சம் டாலர் கோடி ஏற்றுமதியுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இறக்குமதியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. வர்த்தகச்சேவை ஏற்றுமதியில் இந்தியா 8வது இடத்திலும், வர்த்தகச்சேவை இறக்குமதியில் 10வது இடத்திலும் உள்ளது. வர்த்தகச்சேவை ஏற்றுமதி, இறக்குமதி இரண்டிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டும் இந்திய ஏற்றுமதி, மந்தமாகவே உள்ளது. பெட்ரோலிய மற்றும் பொறியியல் பொருட்களின் தேவை குறைந்துள்ளதால் 5.66 சதவிகித ஏற்றுமதி குறைந்துள்ளது.
ஏற்றுமதியில் இந்தியா 19வது இடம்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
