கொரோனா பரவல்- தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பரவும் தகவல்- உண்மை என்ன?

Published On:

| By Minnambalam Desk

Corona Lock Down

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என 2022-ம் ஆண்டு வெளியான பழைய செய்தியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கம் விளக்கம் அளித்துள்ளது. Rumour of Full Sunday Lockdown in Tamil Nadu: What’s the Truth?

“கொரோனா பரவல் காரணமான ஞாயிறன்று தமிழகம் முழுவதும் பொது முடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணி” என சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ பகிரப்படுகிறது. டிவி சேனலின் பிரேக்கிங் நியூஸ் வடிவில் இந்த போட்டோ பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த போட்டோவை ஷேர் செய்து, ஜூன் 22-ந் தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டுக்கு இடையூறு செய்யவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அளித்த விளக்கத்தில், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியானது போல தவறாகப் பரப்பி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share