ரூ.4 கோடி மோசடி : சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு முடித்துவைப்பு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்த தன விமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

அதில், ‘கரூர் மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த என்னை தொடர்புகொண்ட சி விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க 5 கோடி ரூபாய் தரும்படி வலியுறுத்தினார். வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார். 

அதன்படி 4.50 லட்சம் கோடி ரூபாய் திரட்டி விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரரான சோத்துப்பாலை முருகேசனிடம் கொடுத்தேன். வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் செலவுக்காக அந்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் 50 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீத பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

மேலும் சி விஜயபாஸ்கர் தற்போது ஆளும் கட்சியில் இணைந்துள்ளதால் பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுக்கிறார். இது பற்றி புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (அக்டோபர் 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது காவல்துறை சார்பில், மனுதாரர் புகார் குறித்து புதுக்கோட்டை டிஎஸ்பி நடத்திய விசாரணையில் சி விஜயபாஸ்கருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்தது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி லட்சுமி நாராயணன், தன விமல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share