ஏசி பேருந்துகளில் பயணிக்க பாஸ்… வெயில் காலத்தில் வந்த சூப்பர் திட்டம்!

Published On:

| By Kavi

rs 2000 Pass to travel on AC buses in chennai

சென்னை மாநகர பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே வழங்கப்படுகிற மாதாந்திர பாஸ் அல்லாமல் புதிதாக 2000 ரூபாய் பாஸ் இன்று (மார்ச் 19) அறுமுகப்படுத்தப்பட்டது.  rs 2000 Pass to travel on AC buses in chennai

இந்த பாஸ் மூலமாக குளிர்சாதனப் பேருந்து(ஏசி), சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து(எக்ஸ்பிரஸ்), சொகுசுப் பேருந்து(டீலக்ஸ்), சிற்றுந்து(மினி பஸ்), இரவு நேரப் பேருந்துகளில் மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். 

ADVERTISEMENT

மந்தைவெளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  இப்போது 50 ஏசி பேருந்துகள் இயங்குகின்றன. இந்த ஆண்டு மின்சார பேட்டரியில் இயங்கக் கூடிய வகையில் 625 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. எனவே இந்த திட்டம் பயனுள்ள திட்டமாக இருக்கும். 

ADVERTISEMENT

அடுத்தடுத்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  ரூ.1000 பாஸும் நடைமுறையில் இருக்கிறது, 2000 பாஸும் நடைமுறையில் இருக்கும்.  எனவே 1000 ரூபாய் பாஸை தான் 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டாம்” என்றார்.  rs 2000 Pass to travel on AC buses in chennai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share