ரூ.100 கோடி மோசடி… பி.டி.அரசகுமாருக்கு ஜாமீன்!

Published On:

| By Kavi

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிடி அரசகுமாருக்கு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் பதிவு செய்யப்படாத கூட்டமைப்பு தலைவர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த சூழலில் இன்று பிடி அரசகுமாருக்கு ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சத்யமூர்த்தி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அரசகுமாருக்கு இயல்புநிலை பிணை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

அதாவது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் காவல்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யத் தவறியதால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பு தவறினால் இயல்புநிலை பிணை வழங்குவதை சட்டம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதை இந்த உத்தரவின் போது நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

முன்னதாக பிடி அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share