பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த எம்.ஆர் விஜயபாஸ்கர் : ஷாக்கான தவெக வேட்பாளர்!

Published On:

| By Kavi

தாராபுரத்தில் வாக்கு சேகரித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்,  அதிமுகவுக்கு வாக்கு சேகரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஆனந்த், அருண் ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். 

ADVERTISEMENT

அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், “நேற்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர். ஒரு பைசா யாருக்கும் கொடுக்கவில்லை. அவ்வளவு கூட்டம் கூடியது. மதுரையே கலகலத்து போய்விட்டது. உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சொல்லுங்கள், கண்டிப்பாக அதை தமிழக வெற்றி கழகத்தினர் சரி செய்து கொடுப்பார்கள்” என்று கூறினார்.

அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் ஆகியோரும் சத்யபாமாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். 

ADVERTISEMENT

கோரிப்பாளையத்தில் இன்று வாக்கு சேகரித்த சி.விஜயபாஸ்கர், வேட்பாளர் சத்யபாமா உடன் கும்மியடித்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதுபோன்று முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், வாக்கு சேகரித்து பேசும் போது உங்கள் பொன்னான வாக்கை “இரட்டை இலை” சின்னத்தில் செலுத்துங்கள் என்று பழக்க தோஷத்தில் கூறிவிட்டார். தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக, அதிமுக சின்னத்தை அவர் கூறியவுடன் அருகில் இருந்த வேட்பாளர் சத்யபாமா, “அய்யய்யோ விசில் சின்னம்” என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதற்கிடையே சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க நடிகரும் முதல்வர் விஜயின் நண்பருமான ஜெய் தாராபுரத்துக்கு வந்துள்ளார்.

இப்படி இடைத்தேர்தல்  களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை முதல்வர் விஜய் பிரச்சாரத்துக்காக வருகை தர உள்ளார். 

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்து வருகின்றனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share