ரியோ ராஜ் நடித்திருக்கும் ’ராம் இன் லீலா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் ராம் இன் லீலா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதில் நடிகர் ரியோ ராஜ், வர்திகா ஆகியோர் நடித்துள்ளனர். அங்கிட் மேனன் இசையமைத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று (ஆகஸ்ட் 12) வெளியாகியுள்ளது.
ஒரு இளைஞனுக்கு திருமணம் முடிப்பதில் உள்ள நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் வரன் பார்க்கும்போது சந்திக்கும் நகைச்சுவையான சூழல்களுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது.
பின்னர் நடிகர் ரியோ ராஜ் ரயிலில் ஒரு பெண்ணை பார்த்ததும் காதல் வயப்பட்டு அவளை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்.
ஆனால் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது என கூறி மாலை 6:00 மணிக்கு மேல் கதாநாயகி எங்கே போகிறார் என்று தெரியவில்லை. இதன் மூலம் கதையில் ஏதோ ஒரு சுவாரசியமான ரகசியமும் திருப்பமும் இருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
இறுதியாக எனக்கு பிடிச்ச பிரண்டும் நீ தான், பாய் பிரண்டும் நீதான் என்ற வரிகளுடன் நாயகன் நாயகிக்கு இடையிலான உரையாடல்கள் நடக்கின்றன.
இந்த ட்ரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்தில் 34 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
