ஓவியாவின் அந்த வீடியோவை வெளியிட்டது யார் தெரியுமா? பிடிபடும் சுள்ளான்!

Published On:

| By Kumaresan M

களவாணி, மத யானைகூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. சரியான படவாய்ப்பு இல்லாதபோது கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக அது அவர் இல்லை, மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று கூறிவந்தனர். சிலர்  ஓவியாவின் இன்ஸ்டாகிராம் கமெண்டில் “மேடம் வீடியோ ஒன்னு வந்திருக்குது, டைம் கம்மியாக இருக்குது… என்று கேட்டனர். இதற்கு, ஓவியா சளைக்காமல் என்ஜாய் என்று பதிலளித்து வியப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, ஆபாச வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஓவியா தீர்க்கமாக இருந்தார். தற்போது, சென்னையில் வசிக்கும் ஓவியா இந்த வீடியோக்களை நீக்கும்படி திருச்சூர் காவல்துறையிடம் ஆன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார். அதில், பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலுள்ள அந்த வீடியோக்களை நீக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, திருச்சூர் சைபர் கிரைம் போலீசார்  3 வீடியோக்கள் நீக்கியுள்ளனர். மேலும், போலீசார் ஓவியாவின் ஆபாச வீடியோக்களை அப்லோடு செய்த நபர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னணியில் ஓவியாவின் முன்னாள் காதலர் தாரிக் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. பல பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் அவரின் செல்போனில் இருந்ததால், அவருடன் இருந்த தொடர்பை ஓவியா கைவிட்டதாக தெரிகிறது. இதனால், ஓவியாவை பழிவாங்கும் நோக்கத்தில் இது போன்ற மார்பிங் செய்த வீடியோக்களை அவர்தான் இணையத்தில் கசிய விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஓவியாவே கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 58,000 நெருங்கிய தங்கம் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

”சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்ஜிஆர் என்கிறார்கள்” : விஜயை சாடிய ராஜேந்திர பாலாஜி?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share