ஹோம் லோன் நிலுவையில் உள்ள வீட்டை வாங்கப் போறீங்களா? இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க

Published On:

| By Minnambalam Desk

ஹோம் லோன் வாங்கி, அதற்கான EMI-யை செலுத்தி வரும் ஒருவரிடமிருந்து வீடு வாங்குவது சாதாரணமான விஷயம்தான்.

ஆனால் அந்த வீட்டின் கடன் இன்னும் நிலுவையில் இருக்கும்போது, ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றினால் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

ADVERTISEMENT

முதலில் கடன் பாக்கியை தெரிந்து கொள்ளுங்கள்

வீட்டை வாங்குவதற்கு முன்பு விற்பனையாளர் எந்த வங்கியில் எவ்வளவு தொகையை கடனாக வைத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இதற்காக வங்கியிடம் இருந்து Foreclosure Statement பெறுவது முக்கியம். இதில் நிலுவையில் உள்ள கடன் தொகை பற்றிய விவரங்களை சரிபார்க்க முடியும்.

மொத்த தொகையையும் விற்பவரிடம் கொடுக்க வேண்டாம்

ADVERTISEMENT

உதாரணமாக, ரூ.80 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு ரூ.35 லட்சம் ஹோம் லோன் நிலுவையில் இருந்தால், முழு ரூ.80 லட்சத்தையும் விற்பவரிடம் கொடுக்கக்கூடாது.

நிலுவையில் உள்ள ரூ.35 லட்சத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் கடன் கணக்கில் செலுத்தி, மீதமுள்ள ரூ.45 லட்சத்தை விற்பவருக்கு வழங்குவது பாதுகாப்பான நடைமுறையாகும்.
LOD ஆவணத்தை சரிபார்க்க வேண்டும்
ஒப்பந்தம் செய்வதற்கு முன் விற்பனையாளர் வங்கியிடம் பெற்றுள்ள LOD (List of Documents) ஆவணத்தை சரிபார்க்க வேண்டும்.

வீட்டின் அசல் பத்திரங்கள் எந்த வங்கியிடம் உள்ளன என்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம்.

அடமானம் நீக்கப்பட்டதா?

பழைய கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பிறகு, பத்திரப் பதிவு அலுவலகத்தில் அந்த வங்கியின் அடமானம் நீக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் வங்கியிடமிருந்து NOC பெறப்பட்டுள்ளதையும் சரிபார்த்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share