டாடா குழுமத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான டாடா கிளிக் (Tata Cliq), 2025-26 நிதியாண்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நஷ்டத்தை குறைத்துள்ளது.
நிறுவனத்தை நடத்தி வரும் Tata UniStore-ன் நிகர நஷ்டம் முந்தைய நிதியாண்டில் ரூ.314 கோடியாக இருந்த நிலையில், FY26-ல் ரூ.253 கோடியாக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் செயல்பாட்டு வருவாய் 20 சதவீதம் அதிகரித்து ரூ.354 கோடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து குறையும் நஷ்டம்
டாடா கிளிக்கின் நஷ்டம் குறைவதற்கு வருவாய் வளர்ச்சியுடன், பங்களிப்பு வரம்பை (Contribution Margin) மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. நிறுவனத்தின் நிதிச் செலவும் கணிசமாக குறைந்துள்ளது.
FY26-ல் Tata UniStore-ன் நிதிச் செலவு ரூ.48 கோடியிலிருந்து ரூ.9.6 கோடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் வரிக்கு முந்தைய நஷ்டத்தைக் குறைக்க உதவியுள்ளது.
Fashion, Luxury பிரிவுகளில் வளர்ச்சி
டாடா கிளிக்கின் இரண்டு முக்கிய பிரிவுகளான Tata Cliq Fashion மற்றும் Tata Cliq Luxury ஆகியவையும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. Fashion பிரிவு 7 சதவீதமும், Luxury பிரிவு 26 சதவீதமும் வளர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சியை தொடர்ந்து, எதிர்கால ஆண்டுகளில் விற்பனை வளர்ச்சியுடன் ஒவ்வொரு ஆர்டரிலும் கிடைக்கும் பங்களிப்பை அதிகரிப்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளது.
ரூ.3,931 கோடி குவிந்த நஷ்டம்
நஷ்டம் தொடர்ந்து குறைந்து வந்தாலும், Tata UniStore-ன் மொத்தமாக குவிந்த நஷ்டம் FY26 முடிவில் சுமார் ரூ.3,931 கோடியாக உள்ளது. டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகப் பயணத்தில் Tata Cliq முக்கியமான ஆரம்ப முயற்சிகளில் ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகளுடன், Contribution Margin மற்றும் Monetisation-ஐ மேம்படுத்தி இந்தியாவின் முன்னணி omnichannel multi-brand e-commerce நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும் நோக்கில் Tata Cliq செயல்பட்டு வருகிறது.
