தனக்கு வசதியான ஆடைகள் வழங்கப்படாததால் ஷாருக்கான் பட வாய்ப்பை மறுத்ததாக பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தண்டன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற பிற மொழிப் படங்களில் நடித்த பிரபல நடிகை தான் ரவீனா தண்டன். தமிழில் கமல்ஹாசனின் ‘ ஆளவந்தான் ‘ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நானும் நடிகர் ஷாருக்கானும் ஒரு படத்தில் மீண்டும் சேர்ந்து நடிக்க இருந்தோம். அப்போது படத்தில் எனக்கான ஆடை குறித்த பேச்சு வந்தது. அந்தப் படத்தின் ஆடை சற்று வினோதமாக இருந்தது. எனக்கு வசதியான ஆடைகளாக அது இல்லை. சற்று அங்கங்களை புறநிலைப் படுத்துவதாக இருந்தது. அதனால் அதற்கு நோ சொல்லி விட்டேன்.
என் மறுப்பு குறித்து ஷாருக்கான் விளக்கம் கேட்டார். அவரிடத்தில் என் காரணத்தை சொன்னேன். ‘ ஏன் இப்போது மறுக்கிறாய்? நீ என்ன பைத்தியமா? ‘ எனக் கேட்டார். ஏனெனில் நாங்கள் இருவரும் அப்போது சேர்ந்து ‘ சமானா தீவானா ‘ படத்தில் நடித்திருந்தோம். நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். அவர் ஒரு ஜென்டில் மேன்” எனப் பேசியுள்ளார். ஆனால், அவர் ஷாருக்கான் உடன் நடிக்க மறுத்தது எந்த திரைப்படம் என்பதை பேட்டியில் குறிப்பிடவில்லை.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அதானி நிறுவனங்களில் ‘செபி’ தலைவருக்கு பங்குகள்”… மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்
சத்யராஜின் ‘ மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் ‘ வெப் சீரிஸ்… டிரெய்லர் ரிலீஸ்!