ஆட்சியில் பங்கு… போராடி சாதித்தவர் திருமாவளவன் : ரஜினிகாந்த் வாழ்த்து!

Published On:

| By Kavi

அட்சி அதிகாரத்தில் பங்கு என்று ஓயாமல் போராடி சாதித்தவர் திருமாவளவன் என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். 

விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது 65 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளுக்கு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்தும் திருமாவளவனுக்கு வாழ்த்து கூறியுள்ளார். 

அவர் தனது வாழ்த்து செய்தியில்,  ”தனது 28-ஆம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன். 

ADVERTISEMENT

65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share