அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது நிலையில் ராஜ்கமல் நிறுவனம் அதிரடி ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தர்மன்’ படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில், இருவருமே இப்படத்தில் இருந்து பின்வாங்கினர். இதனால் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ரஜினி மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதில் அறிமுக பாடல்கள் மற்றும் முக்கியச் சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் பிரம்மாண்டமான அரங்கில் முக்கிய வசனக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தர்மன் படத்தின் 2-வது ஷெட்யூலும் தொடங்கி உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அதிரடி ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வீடியோவில் முருகர் வேல் சின்னம் பதித்த காப்புடன் ரஜினிகாந்தின் லுக்கை அஸ்வத் மாரிமுத்து உருவாக்கி உள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
