இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தில் இளனுக்கு நாயகியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி நேரடியாக வெளியாகிறது இந்த திரைப்படம். நடிகை ராதிகாவின் பிறந்த நாள் ஆகஸ்ட் 21. அந்த நாளில் இத்திரைப்படம் வெளியாகிறது.
