”இயக்குநர்” விஷாலின் டபுள் ஆக்‌ஷன் “மகுடம்”- நாளை ரிலீஸ்.. எப்படி இருக்கு? பிரபல தயாரிப்பாளரின் முதல் விமர்சனம்!

Published On:

| By Mathi

Director Vishal's Dual Action Film 'Makutam'

நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகி, இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் “மகுடம்” திரைப்படம் நாளை ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வருகிறது.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படம் மகுடம். சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகப்படுத்தும் 45-வது புதுமுக இயக்குநர் நடிகர் விஷால்.

ADVERTISEMENT

இசைஞானி இளையராஜாவின் ரசிகராக அவரையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் விஷால்.

மகுடம் படத்தை ரவி அரசுதான் முதலில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பில் ரவி அரசு- விஷால் இடையே மோதல் ஏற்பட்டதால் விஷால் இயக்கி நடித்துள்ளார்.

ADVERTISEMENT

முதல் விமர்சனம்

சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாகும் “மகுடம்” படம் பற்றி பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தமது முதல் விமர்சனத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்செயனின் “மகுடம்” விமர்சனம்: பிரம்மாண்டமான, ஆக்‌ஷன் நிறைந்த கமர்ஷியல் என்டர்டெயினர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் பிடித்திருந்தது.. அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருக்கும். இதில் இடம் பெற்றுள்ள 3 ஆக்‌ஷன் காட்சிகளை திரையில் பார்க்கும் போது ட்ரீட்டாக இருக்கும்.

ADVERTISEMENT

கேங் லீடர் லிங்காவாக விஷால் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரின் நடிப்பும் பிரமாதமாக உள்ளது. படத்தின் விறுவிறுப்பை ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.. ஸ்டிராங்கான எமோஷனல், சண்டை காட்சிகளுடன் நல்ல என்டர்டெயினர்..
இவ்வாறு தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

Magudam (Tamil) Trailer | Vishal | GV Prakash | Anjali | Dushara | Super Good Films
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share