இயக்குநர் முத்தையாவின் (Director Muthaiya) இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு “இருளன்” (Irulan) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
”தெக்கத்தி சீமை” மண்ணை மையமாக கொண்ட குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடி வீரன், தேவராட்டம், விருமன், காதர்பாட்சா என்ற ராமலிங்கம் படங்களை தந்தவர் இயக்குநர் முத்தையா.

இந்த வரிசையில் சண்முகவேல் பாண்டியனின் ‘நேதாஜி புரடொக்ஷன்ஸ்’ தயாரிக்க இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு “இருளன்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ‘தெக்கத்தி சீமை’யில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
