அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்துக்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த படத்தின் கதையை எழுதி உள்ளார்; அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

ஓ மை கடவுளே படத் தயாரிப்பு நிறுவனமான ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா, இசையமைத்து வருகிறார். ரொமான்ஸ் பிளஸ் அதிரடி ஆக்ஷனுடன் படம் உருவாகிறது என்பதையே ‘அன்பில் அவன்’ டைட்டில் டீசர் வெளிப்படுத்துகிறது.
