ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மொத ராத்திரி’ ( Motha Rathiri) படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நாளை ஆகஸ்ட் 13-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக படக் குழு தயாரித்துள்ள அழைப்பிதழ் இப்போது கவனம் பெற்றுள்ளது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ் “திருமண பத்திரிகை” வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமண அழைப்பிதழில் மணமகன், மணமகள் பெயர் இடம் பெறும் இடத்தில் நாயகன், நாயகியின் கதா பாத்திரங்கள் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. படக்குழுவினரின் பெயர்கள் அனைத்தும் திருமண பத்திரிகையில் எப்படி எல்லாம் இடம் பெறுமோ அப்படியே அச்சிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 21-ந் தேதி திரைக்கு வருகிறது.
