மக்கள் மேடை… லதா ரஜினிகாந்த் அழைப்பு!

Published On:

| By Kavi

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் தொடங்கியிருக்கும் மக்கள் மேடை இயக்கத்தில், ’இந்த மாநிலத்துக்காக பணியாற்ற விரும்புபவர்கள் இணையலாம்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக, திமுக என்றிருந்த தமிழக அரசியல் களம் தற்போது புதிய நகர்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே 75 ஆண்டுகால திமுகவையும், 50 ஆண்டுகால அதிமுகவையும் தோற்கடித்து தவெக ஆட்சி அமைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தின அடுத்த அரசியல் இயக்கமாக பாஜக முன்னாள் தலைவரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, ”we the leader” என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதில் தற்போது வரை 6,47,774 பேர் சேர்ந்துள்ளனர்.

இந்தசூழலில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதாவது லதா ரஜினிகாந்த் கடந்த மார்ச் மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து ’மக்கள் மேடை’ என்ற இயக்கத்தை தொடங்கினார்.

இந்தசூழலில் இன்று வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”இந்த மாநிலத்திற்காக வேலை செய்ய நினைக்கின்ற அத்தனை பேரும் மக்கள் மேடை இயக்கம் மூலம் ஒன்றாக இணையலாம். எங்களைத் தொடர்பு கொண்டு, ஒரு பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த மாநிலத்திற்குப் பல நன்மைகளைச் செய்ய முன்வாருங்கள். ஒன்றாக இணைவோம், ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்வோம்.” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அதற்கான தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே அண்ணாமலை தொடங்கிய பின்னர் ஒரே நாளில் லதா ரஜினிகாந்தும் புதிய இயக்கம் தொடங்கியிருக்கிறார் என்று தகவல் பரவியது.

ஆனால் இந்த இயக்கத்தை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அவர் தொடங்கியிருக்கிறார்.

முன்னதாக அண்ணாமலை பேசும் போது, 2020ல் ரஜினி என்னை அழைத்தார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share