தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ரிட் மனு!

Published On:

| By Mathi

Rahul Gandhi-ECI-Supreme Court

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) எதிர்த்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (அக்டோபர் 12) உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT

இந்தப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த பேரணியின் முடிவில், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். தொடர்பான இதேபோன்ற வழக்குகள் நாளை (அக்டோபர் 13) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.

ADVERTISEMENT

முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்க ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தலைமை நீதிபதி சூர்ய காந்தை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.

ஆனால், இந்த விவகாரங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளாக இருப்பதால் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச முடியாது என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதில் கடிதம் அனுப்பினார்.

அதே நேரத்தில், நீதிமன்றத்தில் முறையாக மனுத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share