டெல்லி போராட்ட இடங்கள் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கம்!

Published On:

| By Mathi

Delhi-Jantar Mantar

டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக 3 புதிய இடங்களை டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

டெல்லியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் முக்கியமான இடமாக இருந்து வந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இங்கு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், போராட்டங்களை நடத்துவதற்கான மாற்று இடங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது.

இந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், போராட்டம் நடத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட இடம் என்ற பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு பதிலாக டெல்லியில் 3 புதிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • ராம்லீலா மைதானம் (Ramlila Ground)
  • புராரி மைதானம் (Burari Ground)
  • கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் (CBD Ground)

இனி இந்த 3 இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நடைமுறைகள் தனியாக வெளியிடப்படும். இதற்கான அறிவிப்பை டெல்லி போலீஸ் ஆணையர் அனுராக் குமார் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share