SIR-க்கு தடை கோரி ராகுல், திருமா உள்ளிட்ட 13 தலைவர்கள் மனு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published On:

| By Mathi

India Bloc-SIR-Supreme Court

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) தடை விதிக்கக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 15-ந் தேதி) விசாரணைக்கு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில்

  • ராகுல் காந்தி – காங்கிரஸ்
  • மல்லிகார்ஜுன கார்கே – காங்கிரஸ்
  • சவுகத ராய் – திரிணாமுல் காங்கிரஸ்
  • அகிலேஷ் யாதவ் – சமாஜ்வாதி கட்சி
  • தேஜஸ்வி பிரசாத் யாதவ் – ராஷ்டிரிய ஜனதா தளம்
  • சஞ்சய் ராவத் – சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி)
  • எம்.ஏ. பேபி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • டி. ராஜா – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • மஹுவா மாஜி – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
  • சுப்ரியா சுலே – தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி)
  • இ.டி. முகமது பஷீர் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
  • தொல். திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  • சஜ்ஜாத் அகமது கிச்சலூ – தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியோர் எஸ்.ஐ.ஆர்.க்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்; வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களையும், அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் (Form 6) செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான பதிவுகளையும் வெளியிட வேண்டும்; தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share