ராகுல், பிரியங்கா காந்தியை ‘இப்படித்தான்’ இழுத்துச் சென்றது டெல்லி போலீஸ்- ‘ஷாக்’ வீடியோ !

Published On:

| By Mathi

Rahul Gandhi- Priyanka Gandhi

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய கூட்டணியின் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை டெல்லி போலீசார் அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவரைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

முன்னதாக ராகுல் காந்தி மீதான போலீசாரின் பலப்பிரயோகம் தொடர்பான படங்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்ட இடத்தின் வெளியே இரும்பு கேட் மீது ஏறி உள்ளே குதித்து செல்ல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முயன்ற வீடியோ வெளியானது.

தற்போது டெல்லி போலீசார் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share