இடைத்தேர்தல் : தாராபுரத்தில் 80.30%, மதுராந்தகத்தில் 86.22%

Published On:

| By Kavi

தமிழகத்தில், இன்று (அக்டோபர் 6) தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 

ADVERTISEMENT

வாக்குபதிவு நிறைவடைந்ததும் ஈவிஎம் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

இரவு 8 மணி நிலவரப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 80.30 சதவிகித வாக்குகளும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 86.22 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

ADVERTISEMENT

இதேபோல புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 80.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

2026 சட்டப்பேரவை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவிகித வாக்குகளும், தாராபுரத்தில் 89.89 சதவிகித வாக்குகளும் பதிவாகிய இருந்தன. 

ADVERTISEMENT

ஐந்து மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்கு சதவிகிதம் சற்று குறைந்துள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share