ஜெம் வீரமணி விவகாரம் : திமுகவுக்கு எதிராக அமைச்சர்கள் மேல்முறையீடு!

Published On:

| By Kavi

ஜெம் வீரமணி விவகாரத்தில் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர திமுகவிற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். 

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் முந்தைய திமுக அரசை குற்றம் சாட்டி அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் பேசி வந்தனர். 

இந்த நிலையில் திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் பேசுவதாகவும், அவர்கள்  ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் என் சதீஷ்குமார் மற்றும் ஜி கே முத்துகுமார் அமர்வில் முறையிடப்பட்டது. 

அப்போது நீதிபதிகள், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு நோட்டீஸ் வழங்காமல் தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே பிரதான வழக்கை எண்ணிட வேண்டாம் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். 

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சார்பில், பிரதான மனுவை எண்ணிடும் படி வலியுறுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கை வரும் அக்டோபர் 13ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share