தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்.. 68.91% வாக்குகள் பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்.6) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் இன்று (அக்டோபர் 6) நடைபெறும் இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 12,575 ஆண் வாக்காளர்கள், 14,341 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 26,921 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 19.2% வாக்குகள் பதிவாகிய நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 39.16% வாக்குகள் பதிவாகின.

மதியம் 1 மணி நிலவரப்படி 56.31% வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 68.91% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இன்று காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

முன்னதாக, புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share