’அண்ணன்’ ராகுல் காந்திக்காக துடித்த ‘தங்கை’ பிரியங்கா காந்தி… ”இரும்பு கேட்” ஏறி குதிக்க முயன்றதால் பதற்றம்!

Published On:

| By Mathi

Rahul Gandhi-Priyanka Gandhi

டெல்லியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அண்ணனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை சந்திப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேட் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் இன்று (அக்டோபர் 6) இந்தியா கூட்டணி கட்சியினர் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்தப் போராட்டத்தின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீசார் தடுத்து வைத்து, கிங்ஸ்வே முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

ராகுல் காந்தியை கைது செய்ய முயன்றபோது அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவரை சுற்றிவளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர், கூட்டத்துக்கு மத்தியில் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது ராகுல் காந்தியை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. போலீஸ் வாகனத்திற்குள் ஏற்றப்பட்ட பிறகும் ராகுல் காந்தியை நோக்கி தொண்டர்கள் முண்டியடித்ததால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து ராகுல் காந்தியை சந்திப்பதற்காக கிங்ஸ்வே முகாமுக்கு பிரியங்கா காந்தி சென்றார். ஆனால், முகாமின் கேட் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் மீது ஏறிய பிரியங்கா காந்தி மறுபுறம் இறங்க முயன்றார். பின்னர் கேட்டை திறந்ததைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் முகாம் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தியை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தியே கேட் மீது ஏறிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share