பின்லாந்து நாட்டைச் சேர்ந்த எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு 2002-ம் ஆண்டு முதல் உலக நாடுகளில் நிலவும் ஊடகங்களின் சுதந்திரத்தன்மை குறித்து ஆய்வுசெய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 180 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவுக்கு 133வது இடம் கிடைத்துள்ளது. சென்ற ஆண்டு, 136வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6வது முறையாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் பத்திரிகையாளர்களும், வலைத்தள பதிவாளர்களும் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாகவும், உலகளவில் ஊடக மரியாதை குறைந்துவருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா 179வது இடத்தையும், கடைசி இடத்தை எரிட்ரியா நாடும் பிடித்துள்ளன.
ஊடகச் சுதந்திரம் இந்தியாவுக்கு 133 வது இடம்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
