ரூ.100 கோடி மோசடி விவகாரம் : பிடி அரசகுமார் மகன் மற்றும் மகள் வீடுகளில் சோதனை

Published On:

| By Pandeeswari Gurusamy

Rs. 100 Crore School Fraud: PT. Arasakumar to be produced before magistrate today

சென்னையில பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் பதிவு செய்யப்படாத கூட்டமைப்பு தலைவர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கச் சென்னை காவல் ஆணையர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, பி.டி. அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கடந்த 2024–25 ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு 2026-இல் வழக்குப்பதிவு செய்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பைத் கடந்த 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடரந்து இன்று சென்னை ஓ.எம்.ஆர் (OMR) சாலையில் உள்ள பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share