சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏற்கனவே நிர்ணயித்தபடி செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. Press meet with Amit Shah: Edappadi refuse?
இன்று (ஏப்ரல் 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கிண்டியில் இருக்கிற ஐடிசி சோழா ஹோட்டலில் பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டு இருந்தார் அமித்ஷா.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் அந்த ஹோட்டலில் தான் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன் பிறகு பகல் 1:30 மணிக்கு தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமித்ஷாவுடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. Press meet with Amit Shah: Edappadi refuse?
சோழா ஹோட்டலில் உள்ள தஞ்சாவூர் ஹால் என்னும் அரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களுடன் பிரதமர் மோடியின் படம் மட்டுமே இடம்பெற்றிருக்கிற பின்னணியோடு இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏழு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அந்த மேடையில் அமர்வது உறுதி.
மீதி 5 நாற்காலிகளில் யார் யார் அமரப் போகிறார்கள் என்பது பரபரப்பான விவாதமாக நடந்தது. Press meet with Amit Shah: Edappadi refuse?
இந்த நிலையில் இன்று மாலை மயிலாப்பூர் சென்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க திட்டமிட்டு இருந்த அமித்ஷா..முற்பகலே ஹோட்டலில் இருந்து கிளம்பி ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டுக்கு அண்ணாமலையோடு சென்றுவிட்டார். அங்கே ஒரு மணி நேரத்துக்கு மேலாக குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக தரப்பிலிருந்து ஒரு ஹாட்டான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை தனிப்பட்ட முறையில் சந்திக்க ஒப்புக்கொண்டாரே அன்றி… தேசிய ஜனநாயக கூட்டணி என்ற மேடையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்பதுதான் அந்த செய்தி.
மார்ச் 25ஆம் தேதி அமித்ஷாவை ஒரு மணி நேரம் சந்தித்தார் எடப்பாடி. அதற்குப் பிறகு மார்ச் 26 பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூட தமிழ்நாட்டின் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச தான் அமித்ஷாவை சந்தித்தோம் என்று கூறியிருந்தார். Press meet with Amit Shah: Edappadi refuse?
இந்த நிலையில் அதன் அடுத்த கட்டமாக அதிமுகவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, எந்த விவாதமும் நடத்தாத நிலையில், அமித்ஷாவோடு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற அடிப்படையில் பத்திரிகையாளர் சந்திப்பில் தான் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று தகவல் அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற வாசகங்கள் பிரஸ்மீட்டின் மின்னணுத் திரையில் இருந்து அகற்றப்பட்டதாக தகவல்கள் ஹோட்டல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கின்றன.
இதனால் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அமித் ஷாவின் நிகழ்ச்சி நிரலிலும் மாற்றம் ஏற்பட்டு அவர் முற்பகலே ஆடிட்டர் குருமூர்த்தியுடன் இந்த நிலைகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.