ஆளுநரின் நடத்தை அருவருப்பானது – பிரகாஷ் ராஜ்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்புடையது அல்ல என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடி வந்தார். ஆனால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று விஜய் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்றார். விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதைத்தொடரந்து விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இதுவரை ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில் பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பதிவில், “இந்த ஆளுநரின் நடத்தை அருவருப்பானது; ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்… ஆனால், விஜய் (மக்களின்) ஆணையைப் பெற்றுள்ளார். சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share