தவெக தலைவர் விஜய் இன்று (மே7) மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதனையடுத்து தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து. விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை விஜய் ஆளுநரிடம் வழங்கினார். ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளார். இதுவரை ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று தற்போது தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க மக்கள் பவனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆளுநர் விடுத்த அழைப்பின் பெயரில் விஜய் இன்று மீண்டும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
