டிஜிட்டல் திண்ணை: காங். செல்வப் பெருந்தகையை சீண்டிய விஜய்.. தவெகவுக்காக ‘இறங்கி’ வேலை செய்யும் ராகுல்.. ‘சோடங்கர்’ சேட்டையால் கடுப்பில் காங். எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Mathi

வைஃபை ஆன் செய்ததும், “நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காதென்பார் நடந்துவிடும்” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. எதுவுமே நடக்கலையா?

ADVERTISEMENT

எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறதுன்னு வெச்சுக்கோங்கய்யா.. விஜய் இன்னைக்கு சிஎம்மாக பதவியேற்பாருன்னு தவெகவினர் எதிர்பார்ப்போட இருந்தாங்க.. ஆனா பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் லிஸ்ட்டை ஆளுநர் அர்லேகர் கேட்டதால சிக்கல் வந்துருச்சு..

சிபிஎம், சிபிஐ, விசிககிட்ட இருந்து ஆதரவை வாங்கிடலாம்னு தவெக ரொம்பவே தீவிர முயற்சி செஞ்சும் இந்த் நிமிஷம் வரைக்கும் ஒன்னும் நடக்கலை..

ADVERTISEMENT

விஜய் வீட்டுக்கு போட்டிருந்த பாதுகாப்பு எல்லாம் வாபஸ் வாங்கிட்டாங்களே?

ஆளுநர் அர்லேகரை நேத்து விஜய் பார்க்க போகும்போதே சிஎம்-க்கான கான்வாய் வாகனங்களுடன் போனாரு… இது ஆளுநரை ரொம்பவே அப்செட் ஆக்கியிருச்சுன்னு நேத்து நாம சொல்லி இருந்தோம் இல்லையா? அதன் தொடர்ச்சியாதான் விஜய் வீட்டுக்கு போட்டிருந்த பாதுகாப்பும் வாபஸ் ஆகியிருக்கு..

ADVERTISEMENT

விஜய் கூட கூட்டணி சேர்ந்ததால காங்கிரஸ் ரொம்ப ஹேப்பியா இருக்கிறதா?

திமுக கூட்டணியில இருந்து காங்கிரஸ் விலகுனதுக்கு சில பேர் பட்டாசு வெடிச்சாலும் அதிருப்தி இருக்கத்தான் செய்யுதுன்னு சொல்றாங்க..

இதை பத்தி காங்கிரஸில விசாரிச்சப்ப, ”விஜய் கூட கூட்டணின்னு முடிவானதுல இருந்து தமிழக காங்கிரஸ் லீடர்ஸை டெல்லி ரொம்பவே பாடாய்படுத்துத்து…

விஜய்யை சந்திக்க போறதுக்கு முன்னாடி ஸ்டாலினை சந்திச்சு நன்றி சொல்லிட்டு வர்றேன்னு கிரிஷ் சோடங்கர்கிட்ட சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் கேட்டாரு.. ஆனா சோடங்கரோ, “அதெல்லாம் எதுக்கு? அப்படி எல்லாம் போய் பார்க்கக் கூடாது”ன்னு கறாரா சொல்லிட்டார்.

ஆனாலும் கூட, “எலக்‌ஷன்ல திமுகவும் கூட்டணி கட்சிகளும் கடுமையா உழைச்சதாலதான் நாங்க ஜெயிச்சுருக்கோம்.. அதனால கர்ட்டஸிக்காகவாவது போய் பார்த்துட்டு வந்தா நல்லா இருக்கும்.. இல்லைன்னா நல்லா இருக்குதுங்க”ன்னு ராஜேஷ்குமார் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், “அதெல்லாம் போகவே கூடாது”ன்னு சோடங்கர் தடை போட்டுட்டார்.. இதனால ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ஏக வருத்தம்.

சத்தியமூர்த்தி பவன்ல இருந்து விஜய் வீட்டுக்கு கிளம்பும் போது பிரவீன் சக்கரவர்த்திதான் பேட்டி எல்லாம் கொடுத்தாரு.. தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையை யாருமே கண்டுக்கலை..

விஜய் வீட்டுக்கு போறப்ப செல்வப்பெருந்தகையை சோடங்கர் உட்பட யாருமே வாங்கன்னும் கூப்பிடலை.. ஆனா, தமிழக காங்கிரஸ் தலைவர் இல்லாமல் விஜய்யை போய் பார்க்கிறது சர்ச்சையாகுமேன்னு வேண்டா வெறுப்பா செல்வப் பெருந்தகையை கூட்டிட்டு போயிருக்காங்க..

விஜய்யை எல்லாரும் போய் பார்த்து சால்வை எல்லாம் போட்டாங்க.. அப்ப செல்வப்பெருந்தகைகிட்ட விஜய்யும் ஆதவ் அர்ஜூனாவும், “நீங்க மட்டும் சரியா இருந்திருங்கீன்னா நாம 200 சீட்டுக்கு மேல ஜெயிச்சுருப்போம்”ன்னு ரொம்பவே கடுப்படித்துவிட்டனர்.. இதில் செல்வப்பெருந்தகை ரொம்பவே அப்செட்டாகிட்டார்..” என்றனர்

டெல்லியில ராகுல் காந்தியைப் பொறுத்தவரைக்கும் எப்படியாவது விஜய் ஆட்சி அமைச்சுடனும்னு ரொம்பவே தவிக்கிறார்.. அதனால லெப்ட் பார்ட்டீஸ், விசிககிட்ட பேசி விஜய்க்கு ஆதரவை தர சொல்லுங்கன்னு மல்லிகார்ஜூன கார்கேகிட்ட ராகுல் சொல்லி இருக்கிறார்..

அதனால மல்லிகார்ஜூன கார்கேவும் சிபிஐ, சிபிஎம், விசிக லீடர்ஸ்கிட்ட பேசி இருக்கிறார்.. ஆனாலும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எந்த ஒரு பாசிட்டிவ் ரிசல்ட்டும் கிடைக்கலை..அதை அப்படியே ராகுல் காந்திக்கும் பாஸ் பண்ணிட்டார் கார்கே”ன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share