பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ரிலீஸ் அப்டேட்!

Published On:

| By Kavi

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் “டிராகன்”. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் டிராகன் படத்தை இயக்குகிறார்.

ADVERTISEMENT

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டிராகன் படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த படத்தை வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதத்தில் டிராகன் படத்தை வெளியிடுவதன் மூலம் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் வசூல் செய்துவிடலாம் என்று தயாரிப்பாளர் சிந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் டிராகன் படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “எல்ஐசி” திரைப்படத்தின் அப்டேட் எதுவும் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!

மேதகு ஆளுனருக்கோர் மித்திரக் கடிதம் !

கிச்சன் கீர்த்தனா: கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்!

இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்? – கார்கே சொல்லும் கணக்கு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share