கிச்சன் கீர்த்தனா: கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்!

டிரெண்டிங்

நம்முடைய உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம். அதற்காக காய்கறிகள், பழங்கள் என பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிறோம். கூடவே, தானியங்களில் ஒன்றை தினமும் நம் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டால், ஆரோக்கியத்தில் இன்னும் சில படிகள் முன்னேறலாம். இந்த வார வீக் எண்டுக்கு கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரத்தை முயன்று பாருங்களேன்…

என்ன தேவை?

கடலைப்பருப்பு – 250 கிராம்
மைதா மாவு – 250 கிராம்
தேங்காய்த்துருவல் – அரை மூடி
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய் – 4
நெய் – 25 மில்லி

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், தேங்காய்த்துருவலுடன் 15 மில்லி நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு, வேகவைத்த கடலைப்பருப்பு, வறுத்த தேங்காய்த்துருவல், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரைத்தக் கலவையை சிறிய எலுமிச்சைப்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் விட்டுக் கொள்ளவும். மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தயாராக வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பணியாரக் கல்லில் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்தால், கடலைப்பருப்பு பணியாரம் ரெடி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கேரட் ஃப்ரைஸ்!

கிச்சன் கீர்த்தனா: அவரைப்பருப்பு சாதம்!

ராயன் செகண்ட் சிங்கிள்… “வாட்டர் பாக்கெட்” கானா காதல்!

அந்தப் பக்கம் போகாதீங்க: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0