டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!

6ஆம் கட்ட தேர்தல்!

உத்தரப் பிரதேசம் 14, ஹரியானா 10, பீகார், மேற்குவங்கம் தலா 8, டெல்லி 7, ஒடிசா 6, ஜார்க்கண்ட் 4, ஜம்மு-காஷ்மீர் 1 என 58 தொகுதிகளில் இன்று(மே 25) 6ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

புயல்!

‘மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று புயலாக மாறும். இந்த புயலுக்கு ரிமெல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, மே 26 நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பம்!

இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாரணாசியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம்!

வாரணாசி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அஜய் ராய்யை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் இன்று பிரச்சாரம் செய்கின்றனர்.

முக்கொம்பில் தண்ணீர் திறப்பு!

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து இன்று கொள்ளிடம் ஆற்றில் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம், பாலங்களில் நின்று செல்ஃபி எடுக்க வேண்டாம், சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக துணிகளை துவைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மே 25) மாலை 6 மணியுடன் கால அவகாசம் நிறைவடைகிறது.

கவுண்டமணி பிறந்தநாள்!

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இன்று தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பெட்ரோல் டீசல் விலை!
70-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

குரூப் 4 மாதிரித் தேர்வு!
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் திருச்சி என்ஆர் ஐஏஎஸ் அகாடெமி சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மாதிரித் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.

யானைகள் கணக்கெடுப்பு!
தென்னிந்திய அளவில் நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பு பணி இறுதி நாளாக இன்று நடைபெறும் என்றும் நீர்வளப் பகுதிகளுக்கு யானைகள் வருவது குறித்து பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்!

ராயன் செகண்ட் சிங்கிள்… “வாட்டர் பாக்கெட்” கானா காதல்!

அந்தப் பக்கம் போகாதீங்க: அப்டேட் குமாரு

“திருக்குறள் என்பது தர்ம சாஸ்திரம்”: ஆளுநர் ரவி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts