31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபு – சுகன்யா

Published On:

| By Kavi

டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21 வது படமாக ‘மேரி கோல்ட்’ படத்தை அறிவித்துள்ளது. 

ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் நடிகர் பிரபுவும், சுகன்யாவும் இணைந்து நடிக்கின்றனர்.

செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இவர்கள் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேரி கோல்ட் படத்தின் மூலம் இணைகிறார்கள். 

ADVERTISEMENT

ரக்சன் மற்றும் நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.. இதில் சுகன்யா, ரக்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

தென் தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பின்னணியில் விறுவிறுப்பான கதையாக மேரி கோல்ட் இருக்கும் என்று படகுழுவினர் கூறுகின்றனர் 

மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

முன்னதாக் ரக்‌ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மறக்குமா நெஞ்சம், வேட்டையன், இதயம் முரளி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share