தனது காதல் முறிவு பற்றியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் சந்தித்த கடினமான சூழ்நிலைகள் பற்றியும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
கேரள நடிகையான அனுபமா, தமிழில் கொடி, தள்ளி போகாதே, பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பைசன் படத்தில் நடிகர் துருவ் விக்ரமுடன் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.
இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் கலந்து கொண்டனர்.
ஆனால் காதல் குறித்த செய்திகளை இருவரும் உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இனி நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டு தனது காதல் முறிவை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த சூழலில் தன்யா வர்மா சேனலுக்கு அனுபமா அளித்த பேட்டியில், “தான் காதலில் இருந்தபோது சுயநலம் மற்றும் மனரீதியில் வதைக்கப்பட்டேன்.
நான் போட்ட பதிவிற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்த உடல் ரீதியான மன ரீதியான துயரங்களின் விளைவே அந்த பதிவு” என்று குறிப்பிட்டார்.
தனது முன்னாள் காதலரின் நடவடிக்கைகளை நடிகர் விக்ரமின் அந்நியன் பட கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசிய அனுபமா, ‘ஒரு நாள் அவர் ரெமோ போல இருப்பார். நமக்கு இப்படி ஒரு காதலனா…இதெல்லாம் நமக்கு கிடைத்த பாக்கியம் என்று நினைக்க தோன்றும். மறுநாள் காட்சிகள் அப்படியே மாறும். இரக்கமற்ற அந்நியன் போல கொடூரமாகவும் நடந்து கொள்வார்.
இது போன்ற மன மாற்றம் தனக்கு மிகப்பெரிய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.
அவரை நான் என் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தேன். நானும் அவருடைய வீட்டிற்கு சென்றேன். மூன்று மாதங்களுக்குள் நிச்சயதார்த்த பேச்சை தொடங்கினர். திருமணம் எங்கே நடக்க வேண்டும், எத்தனை பேரை அழைக்க வேண்டும் என்றெல்லாம் அவரது குடும்பத்தினர் கேட்கத் தொடங்கினர்.
என்னை பணத்துக்கு ஆசைப்பட்டவள் என்று கூறியவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்
நான் அந்த நிச்சயதார்த்தத்தை நிராகரித்து விட்டேன். ஒருவேளை அந்த திருமணம் நடந்திருந்தால் அது விவாகரத்தில் முடிந்திருக்கும்.
சரியான நேரத்தில் எடுத்த முடிவு என்னை ஒரு மோசமான திருமண வாழ்க்கையில் இருந்து காப்பாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.
