பிரதமர் மோடி தமிழகம் வருகையொட்டி போரூர் பகுதியில் திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை (அக்.11) டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார்.
இன்று காலை 11.15 மணிக்கு போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் அவர், அங்கு தமிழக முதல்வர் விஜய் உடன் இணைந்து போரூர் – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு போரூர் பகுதியில் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் காவி வண்ணம் பூசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
