டிஜிட்டல் திண்ணை: ராகுல் தூதர்களுக்கு விஜய் ‘நோஸ் கட்’.. பிபியை எகிற விடும் விஜய்யின் ”ரூட்” கோஷ்டி!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “காலி காலி மொத்தத்துல அவனும்தான் காலி..
ஜாலி ஜாலி அடிப்பொலி”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. செம்ம குத்து பாட்டா இருக்கே?

ADVERTISEMENT

செம்ம குத்து பாட்டா? சிஎம் விஜய்யின் ‘அரபி குத்து’ பாட்டாசே இது.. அப்படி ஒரு வைப் இருக்கும் ப்ரோ.. இப்ப நான் சொல்லப் போறதும் சிஎம் விஜய் நியூஸ்தான் ப்ரோ..

”இப்ப சிஎம் நெக்ஸ்ட் பிஎம்”-ன்னு சரண கோஷம் மாதிரி தவெகவினர் எங்க போனாலும் சொல்ல சொல்ல அவங்க கூட்டணி கட்சியான காங்கிரஸ் செம்ம கடுப்பில் இருக்கு.. தமிழ்நாட்டுலதான்னு இல்லை.. வட இந்தியாவிலேயும் ”நெக்ஸ்ட் பிஎம் விஜய் தளபதிதான்”ன்னு ரீல்ஸ் போடவெச்சு அந்த ரீல் ஒன்னும் லட்சக்கணக்கில் ரீச் ஆகிட்டு இருக்கு.. அந்த ரீல்ஸ்-ல் எல்லாம் தமிழ்நாட்டுல ‘பாலாறும் தேனாறும்’ ஓடவெச்சுட்டாரு விஜய் ரேஞ்சுக்குதான் அத்தனையும் பொய் பொய்யா இருக்கு.. இது காங்கிரஸ் கட்சியை இன்னமும் ‘செம்ம’ காண்டாக்கிவிட்டிருச்சு ப்ரோ..

ADVERTISEMENT

அதனாலதான, “விஜய்தான் பிரதமர் அப்படின்னு சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க”ன்னு மாணிக்கம் தாகூர் ‘கூலா’ டீல் செஞ்சு பார்த்தார்.. ஆனாலும் இந்த ‘ஆட்டத்தை’ தவெக தரப்பு நிறுத்தலை.. இந்தியா டுடே சி வோட்டர் சர்வேயிலும், பிரதமர் ரேஸில் விஜய் இருக்கிறார்.. அவருக்கு ராகுலுக்கு அடுத்ததாக 9.2 சதவீதம் ஆதரவு இருக்குன்னு சொல்ல.. ‘உச்சகட்ட’ கோபத்துல காங்கிரஸ் கொந்தளிச்சுகிட்டு இருக்குது..

இதனாலதான் கன்னியாகுமரியில பேசுன அமைச்சர் ராஜேஷ்குமார், ”2029-ல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்.. அதை தவெக ஏத்துக்கலைன்னா நாங்க அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செஞ்சுடுவோம்”ன்னு வெகுண்டு எழுந்துட்டாரு… அதே டைம்ல சட்டசபையில காங்கிரஸின் தாரகை கத்பர்ட், திமுகவோட கூட்டணி வெச்ச காலங்களை ‘வசந்த கால’ நினைவுகளை போல பட்டியலிட்டு பேசுனாங்க..

ADVERTISEMENT

இந்த பின்னணியில சென்னை தலைமை செயலகத்துல சிஎம் விஜய்யை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியும் நேத்து சஞ்திச்சு பேசுனாங்க.. பிரவீன் சக்கரவர்த்தியும் மாணிக்கம் தாகூருடன் போனதால ராகுல் காந்திதான் இவங்களை அனுப்பியதாக பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருந்துச்சு..

இந்த சந்திப்பு பத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் விசாரிச்சப்ப, “விஜய்கிட்ட பல விஷயங்களை ‘ராகுல் காந்தி’ கருத்தாகவே ரெண்டு பேரும் சொன்னாங்க.. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்ததாலேயே திமுக எங்க மேல கோபத்துல இருக்கு.. இந்தியா கூட்டணியில இருந்து விலகியிருச்சு திமுக.. நாங்களும் எவ்வளவோ சமாதானம் செஞ்சு பார்த்தும் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைதான் திமுக எடுக்குது.. இன்னொரு பக்கம் பாஜகவும் திமுகவை அப்ரோச் செஞ்சுகிட்டு இருக்காங்க..

இப்ப, நீங்கதான் நெக்ஸ்ட் பிஎம்ன்னு உங்க கட்சிக்காரங்க பேசுறதை ராகுல் காந்தி விரும்பலை.. அதுவும் வட இந்திய மாநிலங்களில்ல இந்த பிரசாரத்தை உங்க ஆட்கள் ரொம்பவே தீவிரமா செஞ்சுகிட்டு இருக்காங்க.. இதை பத்தி டெல்லி தலைவர்கள் ரொம்பவே பீல் பண்றாங்க.. அதனால நீங்க இதை எல்லாம் நிறுத்த சொல்லுங்க”ன்னு பேசுனாங்க.

விஜய்யோ, மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசுனதை சுத்தமாகவே ரசிக்கவே இல்லை.. விஜய்யோட பாடி லாங்குவேஜும்கூட, இவங்க ரெண்டு பேரும் பேசுறதை கேட்கவே விரும்பாத மாதிரியே இருந்திருக்கு.. அட்லீஸ்ட், “சரிங்க.. நான் பார்த்துக்கிறேன்.. சரிங்க நான் கட்சிக்காரங்ககிட்ட பேசுறேன்”ன்னு கர்ட்டஸிக்கு கூட விஜய் எதுவும் சொல்லாமலேயே வழியனுப்பி வெச்சுட்டார்.. இதனால நாங்க எல்லாருமே ரொம்ப அப்செட்டில்தான் இருக்கிறோம்”ன்னு சொல்றாங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share