பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முகநூல் பக்கத்திலிருந்து சற்று நேரம் நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கடந்த ஜூலை 23ஆம் தேதி பிரதமர் மோடி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் நீட் தேர்வு தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு மசோதா தாக்கல் செய்வது தொடர்பாகவும் பேசி இருந்தார். இந்த வீடியோ 24 மணி நேரத்தில் 30.3 கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.
பிரதமர் பேசிய இந்த வீடியோ முகநூல் பக்கத்தில் இருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மெட்டா நிறுவனம் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மெட்டா நிறுவனம், தொழில்நுட்ப காரணமாக இந்த நீக்கம் நடைபெற்று இருக்கிறது. மீண்டும் அந்த வீடியோ முகநூல் பக்கத்தில் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ளது.
இதனிடையே மெட்டா நிறுவனத்தின் சர்வதேச தலைவருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
