விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி ‘தடை’ உத்தரவு!

Published On:

| By Mathi

Plot to Topple Vijay Govt: Madras High Court Issues Key Directives

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

முதல்வர் விஜய் ஆட்சியை, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் கவிழ்க்க சதி நடந்தது; த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.35 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டது என்பது வழக்கு.

ADVERTISEMENT

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானவர்களில் ரமேஷ் என்பவரும் ஒருவர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் தாக்கல் செய்த ரிட் மனுவில், “அரசியல் அழுத்தங்களால் இந்த வழக்கில் தன்னை போலீசார் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்; இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு (CBI) மாற்ற வேண்டும்” என கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனுவை இன்று ஜூலை 29-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, ரமேஷ் மீதான போலீசாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தது; மேலும் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சி.பி.ஐ. பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share