ராஜினாமா செய்த அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை!

Published On:

| By Mathi

AIADMK Supreme Court

முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்த 4 அதிமுக (AIADMK) முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து இவர்கள் வென்ற மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சீனிவாசன் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “ தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் தவெகவில் இணைந்த 4 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share