தமிழ்நாடு- புதுவை பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த பேரறிவாளன்!

Published On:

| By Mathi

Perarivalan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சிலில் இன்று ஏப்ரல் 27-ந் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார்.

1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளனும் ஒருவர். 31 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தால் 2022-ம் ஆண்டு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் சட்டம் பயின்ற பேரறிவாளன், இன்று தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தர்மதிகாரி முன்னிலையில் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பேரறிவாளன் பதிவு செய்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share