தவெகவிடம் இருந்து ஆதரவு கோரி இதுவரை கடிதம் ஏதும் வரவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழல் உள்ளது. த.வெ.கவிற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கோரி கடிதம் எதுவும் அனுப்பவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “த.வெ.க ஆதரவு கோரி கடிதம் அனுப்பவில்லை. மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. திமுக கூட்டணியில் தொடர்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
