நடிகரும் தவெக தலைவருமான விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க, தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இன்று (மே 6, 2026) நண்பகல் 12:30 மணிக்கு சென்னை வருகிறார்.
இந்நிலையில் விஜய் பதவி ஏற்பு குறித்து பேசிய ஆளுநர், ” விஜய் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் அனுப்பி உள்ளார். மெஜாரிட்டியாக 35% வாக்குகளை பெற்றுள்ளதாக விஜய் கூறியுள்ளார். அதே சமயம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என கேட்டுள்ளேன்.
எம்எல்ஏக்களின் எண்ணிக்கை விவரத்தை சொல்வதாக விஜய் கூறியுள்ளார். 118 அல்லது மேற்பட்ட எம்எம்எல்ஏக்கள் ஆதரிப்பதாக நிரூபிக்க வேண்டும்
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு என பல வாய்ப்புகள் உள்ளன. அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு முடிவு எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
