ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல்.. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் கூடும் நாடாளுமன்றம்!

Published On:

| By Mathi

Parliament

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ந் தேதி திங்கள்கிழமை தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. India Parliament

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ந் தேதி வரை நடை பெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த கூட்டத் தொடரில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா உள்ளிட்ட 8 புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது.

மணிப்பூரில் அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரப்படும்.

ADVERTISEMENT

மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, இஸ்ரேல்- ஈரான் போரில் இந்தியாவின் நிலைப்பாடு, அகமதாபாத் விமான விபத்து, பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுவது, மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பு, மாநிலங்களுக்கான நிதி மறுப்பு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி தரக் கூடும்.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தாமே தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 24 முறை கூறியிருப்பது பற்றியும் எதிர்க்கட்சிகள், இந்த கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share